போலிஅப்பாவி

எனக்கு தெரிந்த நியாயம்

Tuesday, August 30, 2005

வேதாளங்கள்

என்னதான் மந்திரிச்சு உட்டாலும் திருந்தாது. பொரட்டிப் போட்டு அடிச்சாலும் சாவாது. தொவச்சு காயப் போட்டாலும் மறுபடி வெரப்பா வந்துடும். அட இந்த சூப்பர் ஸ்டார பத்திதான்யா சொல்லுதேன்.

சாதாரண நடிகனா வந்தாரு..கைய கால வெட்டி ஸ்டைல் பன்னாரு..அடடான்னு எல்லாரும் பாத்தாய்ங்க..பின்னால போனாய்ங்க..நான் நீன்னு போட்டி போட்டு பொட்டி போட்டாய்ங்க.

நாலாவட்டத்துல எல்லாரும் பின்னால போய் இவரு முன்னால நின்னாரு..நின்னுட்டு போ..அட அத்தோட விட்டாங்களா..நடிகன் மட்டுமில்லப்பா நல்ல மனுஷன்னாய்ங்க..சரி சந்தோஷம்..நல்லா இரு..ஆனா இருந்தாத்தானே..நம்மாலுங்களுக்கு தெரியாத சாமிய கொண்டு வந்தார்..அது வரைக்கும் கோயில் கொளம் பாக்காத பசங்கள்ளாம் தாயித்து கட்டிக்கினாங்க.

சரி..வெட்டியா சுத்திகிட்டு திரியிறதுக்கு இது பரவால்லேன்னு பாத்தா..அவர் தான் எங்க குருன்னாய்ங்க..தலைன்னாய்ங்க...முதல்ன்னாய்ங்க...அட..இப்டி சூடுன்னு அந்த ரூட்ல கொஞ்சம் நூல் உட்டுப்பாத்தாரு...அவ்ளோவ்தான்..நம்ம தலைக்கெல்லாம் இன உணர்வு பிச்சுகிச்சு. ஒடனே டெல்லி பக்கம் லுக்கு உட்டு கொரலு உட்டுப்பாத்தார். நம்மாளுங்களுக்குத்தான் டெல்லியப்பத்தி கவலயில்லியே..ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன..எவனுங்கேக்கலே.

கூட்டி கழிச்சு கும்மியடிச்சு ஓரங்கட்டுனாய்ங்க. சரின்னு குரு லைன்ல போய் பார்த்தார்..தன்னை தலைவனா ஏத்துக்காத ஜனங்ககிட்ட கடவுளோட அவதாரம்னு பிலிம் காட்னார். போய்யான்ட்டாய்ங்க.

களைச்சுப்போய் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு எல்லா பந்தாவையும் விட்டுட்டு வெறும் நடிகனா மறுபடி வந்தார். எல்லாரும் பாராட்னாய்ங்க..கொண்டாடுனாய்ங்க.

நல்ல மாடார்ந்தா என்ன செய்யனும்..? அப்டியே பதூசா போவனும்..போனிச்சா..?

பெரியவர் பேர்ல புதுப்படமாம்..பெரிய டைரக்டராம்..பெரிய பேனராம்..அல்லோல கல்லோலப்படுது..படட்டும் படட்டும்..எனக்கென்ன வந்திச்சுங்கறீங்களா..அதத்தாஞ்சொல்ல வர்றேன்.

பெரிய பேனர்காரங்க பேட்டி குடுத்துக்கிறாங்க..எப்டி..இப்டி..

'சில பல நேரங்கள்லே அவரை அறியாமல் அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்'

“அப்போது என் மகன் குகன், செக் புக்கைக் கொண்டு வராததால் எங்கள் பர்சிலிருந்து ரஜினிக்கு 1001 ரூபாயும், ஷங்கருக்கு 1001 ரூபாயும் அட்வான்ஸாகக் கொடுத்தேன். நாங்கள் ரஜினிக்குக் கொடுத்த புது நோட்டிலிருந்த எண்களின் கூட்டுத் தொகை 9 என்று வந்திருக்கிறது. அதேபோல ஷங்கருக்குக் கொடுத்த நோட்டில் இருந்த எண்களின் கூட்டுத்தொகை 8 என்று வந்திருக்கிறது. ரஜினியின் ராசி எண் 9 என்பதும், ஷங்கரின் ராசி நம்பர் 8 என்பதையும் தெரிவித்த அவர்கள், எனக்கு போன் செய்து ‘தெரிஞ்சே பிளான் போட்டு இந்த நோட்டுகளைக் குடுத்தீங்களா?’னு கேட்டதும், ‘பர்ஸல இருந்து திடீர்னு எடுத்துக் கொடுக்கற பணத்தில் எப்படி நம்பரெல்லாம் பார்க்க முடியும்?’னு கேட்டேன்.”

“எல்லாமே எதிர்பாராம நல்லதா நடந்துக்கிட்டிருக்கு”

என்னதாஞ் சொல்ல வர்றாய்ங்க...எதுவேனா சொல்லிட்டு போ..நான் வேதாளம்ங்றேன். நீ என்ன சொல்ற..?

நல்லாயிருந்தா இதப்பத்தி www.thamizmanam.com -ல சொல்லிவைங்க. இதுவரை சொன்னவுங்க : சொல்லப்போறவுங்க மேல உள்ள(ஸ்டார்ல) சுட்டுங்க.

Sunday, July 10, 2005

இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவுல

அடுத்த சாமியார் வந்துட்டார்!

அரை டவுசர் ஜீன்ஸ் சட்டை கையில சிகரெட்டோட ஒரு புது சாமியார் வந்துருக்காராம். நீங்க என்னா சாமின்னு கேட்டா..நா ஒன்னுஞ்சாமியில்லன்னாராம்..அப்ப இந்த சனங்க எதுக்கு கூடுதுன்னா அதெல்லாம் எனக்கு தெரியாதுன்னாராம்.

கோவில்,படையல் காணிக்கையெல்லாம் களை கட்டுதாம். காரு செல்போனெல்லாம் காணிக்கையா வந்திருக்காம். திடீர்னு காணாமப் போயிடுவாராம்..யாருக்கும் தெரிய மாட்டாராம். வந்த பின்னாடி கேட்டா என் முத்துன சிகாமனியள பாக்க போயிருந்தேங்கராராம். நானூத்தி அறுவது நாள் கழிச்சு தூங்கிடுவேன்றாராம்.

இவர் பூர்வீகம் யாருக்கும் தெரியலியாம்..ஆனா நான் மெட்ராஸ்ல டிரைவரா இருந்தேன்றாராம். ஏதோ ஒரு சக்தி என்னை இயக்குதுன்றாராம். எல்லாரும் வரிசையா ஆசிவாங்க நிக்கிறாங்களாம்.

என்னத்ததாஞ் சொல்லு..இதுக கேட்டாத்தானே! புதுசா யாரையாச்சும் பாத்தா ஒன்னு திருடன்னு கட்டிவச்சு ஒதைக்கிறது இல்லன்னா அத இத சொல்லி பெரிய சாமின்னுடறது.

ஒழச்சமா சாப்டமா கோயிலுக்கு போயி கும்ப்டமான்னு இல்லாம இது என்னய்யா பழக்கம். சும்மா தம்மடிச்சுகிட்டிருந்தவன புடிச்சு நெய்யுஞ்சோருங் குடுத்து கால்ல வுழுறது, அவனே இல்லன்னாலும் 'ஒனக்கு தெரியாதுய்யா..நீ பெரிய ஞானி..சும்மா ஒக்காரு'ன்னுட்டு அத செஞ்சான் இத செஞ்சான்னு கத கட்டிவிடறது.

அவன் நல்லா தின்னுட்டு கொழுத்து போய் 'கன்னி பூஜை பண்ணப்போறேன்..பொண்ணக் கூட்டியாம்பான்' அப்புறம் குய்யோ முறயோன்னு கத்தவேண்டியது. இதே பொழப்பாப்போச்சு.

அய்யா!

சாமிய நம்புனா...ஒனக்கு விதிச்சதுதான் நடக்கும்னு, போற வழிக்கு புண்ணியந்தேட நாலு நல்லகாரியத்த பண்ணு

....அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்....ஆலயம் பதினாயிரம் நாட்டல்..இன்ன யாவினும் புண்ணியங்கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்...

யாராவது ஏழப்பசங்கள படிக்க வைய்யி..ஏழ பொண்ண கட்டிக்குடு..ஆப்ரேசனுக்கு காசு குடு..இதெல்லாம் என்னா பாவமா? சாமிக்கு புடிக்காதா?

காலைல முழிச்சதுலேந்து படுக்கப்போற வரை நீ பன்றதெல்லாம் பாவம்..அதான் பயந்து போய் எப்டியாச்சும் தப்பிச்சுக்கலாம்னு யாராச்சும் சாமியார்னாலே ஓடிப்போய் வுழுந்துடறே..

யாராரோ சொல்லிப்பாத்துட்டாங்க..நாஞ்சொல்லியா நீ கேக்கப்போற?

நல்லாயிருந்தா இதப்பத்தி www.thamizmanam.com -ல சொல்லிவைங்க. இதுவரை சொன்னவுங்க : சொல்லப்போறவுங்க மேல உள்ள(ஸ்டார்ல) சுட்டுங்க.

Thursday, June 23, 2005

காவி வேட்டில பச்சக்கற

ஜின்னா நல்லவருன்னு அத்வானி சொன்னத ஆரெஸ்ஸஸ் ஒத்துக்கல.. ஆரெஸ்ஸஸ் ஒத்துக்காதத பிஜேபி ஒத்துக்கல..பிஜேபி ஒத்துக்காதத விஎச்பி ஒத்துக்கல..மொத்தத்துல இவங்க நாடகத்த ஜனங்க ஒத்துக்கல.

சுதந்திர இந்தியாவுல முஸ்லீம்களோட நலன் பேணப்படாதுன்னுதான் ஜின்னா தனிநாடு கேட்டதாவும், இந்துக்கள் மட்டுமே வாழ்ற இந்தியா வேனுன்னு ஆரெஸ்ஸஸும் இந்தியாவ ரெண்டா பிரிக்க சொன்னதாவும், காந்தியார் மொதல்ல தடுத்து பாத்து அப்புறமா ரெண்டுபேரும் வெட்டிக்கிட்டு சாவுறத பாத்துட்டு சரின்னு சொன்னார்னும் படிச்சிருக்கோம் கேட்டிருக்கோம்.

தன்னோட சமூகம்னு தனியா பிரிச்சி பாத்த ஜின்னாவும் அவரோட ஆதரவாளர்களும் ஆகட்டும், ஆரெஸ்ஸஸ் ஆகட்டும் ரெண்டு தரப்புமே மதவாதிங்கதான். அப்புடி பிரிச்சதாலதான் பாகிஸ்தான்ல இந்துக்களும், இந்தியாவுல முஸ்லிம்களும் சிறுபாண்மையாகி பெரும்பாண்மை சமூகத்தோட ஒட்டாம போய்ட்டாங்க. இல்லன்னா பெரும்பாண்மை சிறுபாண்மை எல்லாங் காணாமப்போயி இந்தியாவோட இறையாண்மை மட்டும் இருந்திருக்கும்.

உதாரணத்துக்கு பக்கத்துல உள்ள கேரளாவுல பாத்தா இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவன் எல்லாம் சமமா இருகுறதால அவங்களுக்குள்ள மத அடிப்படைல ப்ரஷ்னம் ஏதுமில்லா. மொழி அடிப்படையில ஒத்துமையா இருக்காங்க.

இப்ப நாஞ்சொல்லவர்ரது என்னன்னா? ஜின்னா நல்லவருன்னு அத்வானி சொன்னாக்க அத்வானி நல்லவருன்னு எல்லாருஞ் சொல்வாங்கங்குறது தப்புகணக்கு. மதச்சார்பற்றவர்னு பேருவாங்கனுன்னா இன்னொரு மதத்துக்காரரெ புகழனும்னு அவசியமில்ல. நாயமா நடந்துகிட்டாலே போதும்.

காயிதே மில்லத் முஸ்லிம் தலைவருன்னு அறியப்பட்டவர்தான். நாடு பிரிஞ்சப்போ முஸ்லிம் லீக்கோட சொத்தையும்பிரிச்சு இந்திய முஸ்லிம்களோட பங்க கொடுத்தப்போ 'பாகிஸ்தான்ல இருக்குற இந்துக்களோட பாதுகாப்புதான் எங்களோட பங்கு, அவங்கள பத்திரமா பாத்துக்கங்க'ன்னு சொல்லிட்டாராம். அதுனாலதான் அவர் இந்துக்களோட இதயத்துலயும் இடம்பிடிச்சிருக்கார்.

அதனால, அத்வானி ஐயாவும் இன்னும் அவங்களப்போல உள்ள தலைவர்களும் தங்கள் சமூக மக்களுடைய நலன மட்டும் பாக்காம நாட்டுல உள்ள எல்லா தரப்பு மக்களுடைய நலனிலும் அக்கற காட்டுனா நிச்சயமா இந்து தலைவராயிருந்தாலும் எதிர்காலத்துல இந்திய தலைவரா மதிக்கப்படுவாங்க.

என்ன நாஞ்சொல்றது..?

நல்லாயிருந்தா இதப்பத்தி www.thamizmanam.com -ல சொல்லிவைங்க. இதுவரை சொன்னவுங்க : சொல்லப்போறவுங்க மேல உள்ள(ஸ்டார்ல) சுட்டுங்க.

Tuesday, June 21, 2005

சேக்காளி! நாஞ்சொல்றது என்னன்னா?

இப்ப எங்க போனாலும் மொழிப்போர்,மொழிப்பாதுகாப்புன்னு கெடக்கு. நானும் யோசிச்சு யோசிச்சு பாக்குறேன்..திடீர்னாப்ல மொழிக்கு இப்ப என்ன ஆபத்து வந்திடுச்சுன்னு..யாராச்சும் உன் மொழியில பேசக்கூடாதுன்னோ, படிக்கக்கூடாதுன்னோ இல்லன்னா இனிமே வேற மொழியிலதான் பேசனும்னோ, படிக்கனும்னோ மெரட்ராங்களா?

என்னா எதுக்குன்னு தெரியாமலே 'கட பேர அழி,பட பேர மாத்து'ன்னு ஆளாளுக்கு கத்துறாய்ங்க..குத்துறாய்ங்க. எத எப்டி செய்யனுன்னு இவிங்க சொல்றபடிதாஞ் செய்யனுமாக்கும். இதுல 'அப்டி சொல்லு..என்னையுஞ் சேத்துக்கோ'ன்னு கூட்டணி(கூத்தணி) வேற.

'கன்னடனுக்கு வெறி புடிச்சிறுச்சி'ன்னாய்ங்க..இப்ப அவிங்க இத என்னாம்பாய்ங்க? இப்டியே நாட்ல எல்லாரும் ஆரம்பிச்சாய்ங்கன்னா ஊரு உருப்படுமா? ஊருவிட்டு ஊரு போவ முடியுமா?

யோவ்..! யாருமே எந்த மொழியையுமே தேவப்பட்டாத்தேம் பேசுறோம். தேவயில்லாம பேசாதீங்கய்யா! யாரோ கண்டுபுடிச்ச 'கம்ப்யூட்ருக்கு' கணினின்னு பேரு வக்கிறோம், ஆனா அவங்கண்டுபுடிச்ச விண்வெளிக்கல்லுக்கு 'பொங்கல்'னு பேரு வச்சிகிறான். உடனே 'அவனுக்குத் தெரியிது அரும'ன்னு செல்றீங்க..அரும தெரிஞ்சா வச்சான்? பெருந்தண்மையா வச்சான்.
'எட்டுத்திக்கும் போய் எல்லாத்தையுங் கட்டிட்டுவந்து கொட்டுங்கப்பா'ன்னு நம்ம பாரதிதாசரு சொன்னாரோல்லியோ? குண்டுச்சட்டில குதிரை ஓட்டுனா எட்டுத்திக்கும் எப்டிய்யா போறதுன்னேன்?

இன்னொன்னுஞ் சொல்லிக்கறேன்..நாவொன்னுந் தாய்மொழிய மறந்துருன்னு சொல்லல. ஒரு சமுதாயத்தோட அடையாளம் மொழிதான். எல்லா மொழிக்காரனும் கூடுற இடத்துல, 'அய்யோ..அம்மா'ன்னு கத்துனா எல்லாருந் திரும்புவாங்க..ஆனா மத்தவன்லாம் பாத்துட்டு போய்க்கிட்டே இருப்பான்..நம்மாளு மடடும் நின்னு என்ன ஏதுன்னு கேப்பான். அதான்யா அடையாளம்.

அத மத்தவனும் மதிக்குபோதுதான் அது உயருது. எப்ப மதிப்பான்? நம்ம சரக்கு நல்லாயிருந்தாத்தான். நம்ம சரக்கு 'கட பேர்லயும்,பட பேர்லயும்' இல்லய்யா. கலையிலயும் பண்பாட்டுலயும் இருக்கு. அத மேம்படுத்த பாருங்க.

இயல்,இசை,நாடகம்னு எவ்ளவோ இருக்கு, திரைப்படத்துல அத கொண்டுவரச்சொல்லுங்க, எங்கயோவுல்ல கலாச்சாரத்த இங்க நடக்குதுன்னு காட்றாங்களே அத நிறுத்தச்சொல்லுங்க. நம்ம நடை,உடை,பாவனைகளை கேலியா காட்னா (கச்சய கட்னா..கோடு போட்ட உள்ளாடை..ஏன்..போடக்கூடாதா?) தடைவாங்கி நீக்கச்சொல்லுங்க.

நம்மவூரு தொலைக்காட்சி நிகழ்ச்சில தொர மாதிரி பேசறாங்களே அத எதித்து கொரலுவுடுங்க. நலிவடஞ்சிட்டுபோற கிராமியக் கலைஞர்களை ஊக்குவிக்க புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கச் சொல்லுங்க.

கவிஞர்கள்,இசைஞர்கள் கூட்டு முயற்சில நல்ல தொகுப்புகள் வெளிவரச்செய்யுங்க, நம்மாளுங்களோட தரமான படைப்புகள உலக மொழிகள்ல மொழிபெயர்க்க இயக்கம் நடத்துங்க. இதன் மூலமா புதிய தொழில் வேலை வாய்ப்புகள உண்டக்குங்க.

இப்டி ஆக்கபூர்வமா எவ்ளவோ செய்றத உட்டுபுட்டு 'அடுத்தவன் உரிமைல' ஏன்யா தலவுடுறீங்க?

என்னமோப்பா.! செல்னுன்னு தோனிச்சு..சொல்லிட்டேன். அடிச்சாலுஞ்சரி.

நல்லாயிருந்தா இதப்பத்தி www.thamizmanam.com -ல சொல்லிவைங்க. இதுவரை சொன்னவுங்க : சொல்லப்போறவுங்க மேல உள்ள(ஸ்டார்ல) சுட்டுங்க.